மேற்கு ராஜஸ்தானில் வெப்ப அலைக்கான ரெட் அலர்ட்: வட இந்தியாவில் நீடிக்கும் வெப்ப அலை..!

மேற்கு ராஜஸ்தானில் இன்று மற்றும் நாளை வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அகமதாபாத்,

ராஜஸ்தானில் பெரும்பாலான இடங்களில் இந்த வருடத்தின் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட நான்கு முதல் எட்டு டிகிரி வரை அதிகமாக பதிவாகியுள்ளது. புதன் பார்மரில் 48 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது, ஸ்ரீ கங்காநகர் இன்று 47.3 ஆக உள்ளது, பிகானர் 47.2 ஆகவும், சுரு கிட்டத்தட்ட 47 டிகிரியாகவும், அஜ்மீரில் 45 ஆகவும், உதய்பூர் 44 டிகிரியாகவும் உள்ளது.

மேற்கு ராஜஸ்தானில் இன்று மற்றும் நாளை வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதே போல மேற்கு, மத்திய மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளும் இந்த வாரம் முழுவதும் வெப்ப அலையை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com