

ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் பீர்வா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து காஷ்மீர் போலீசார், பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த பகுதியில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே இன்று காலையில் இருந்து கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதனை காஷ்மீர் மண்டல போலீசார் டுவிட்டரில் தெரிவித்து உள்ளனர்.
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பதிகாம் பகுதியில் நேற்றிரவு மற்றொரு என்கவுண்ட்டர் சம்பவம் நடந்தது. இதுபற்றிய விவரம் பின்னர் வெளியிடப்படும் என்றும் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.