கர்நாடகாவில் வெளுத்து வாங்கிய கனமழை... வெள்ளக்காடான சாலைகள்

கர்நாடகாவில் பெய்துவரும் தொடர் மழையால், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.
கர்நாடகாவில் வெளுத்து வாங்கிய கனமழை... வெள்ளக்காடான சாலைகள்
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இடைவிடாமல் கொட்டி வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் தட்சிணகன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மற்றும் சிக்கமகளூரு, ஹாசன், குடகு, சிவமொக்கா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால் அந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.

தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள பல்குனி ஆறு, குமாரதாரா ஆறு, நேத்ராவதி ஆறுகளிலும் தண்ணீர் இருகரைகளை தொட்டப்படி கரைபுரண்டு ஓடுகிறது. கர்நாடகாவில் கொட்டி வரும் மழை காரணமாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.   

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com