

கொச்சி
கேரளாவில் அடுத்த 4 நாட்களாக கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளது. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
இந்த மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்ட பகுதிகளில், 64 மி.மீ. முதல் 115 மி.மீ. வரை மழை பெய்ய கூடும் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
கேரளாவில் நடப்பு ஆண்டில் ஜூன் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் மழை குறைவாக பெய்துள்ளது. இதன்படி, 28 சதவீத மழைப்பொழிவு குறைந்துள்ளது என தெரிவித்தது.
இதனால், கடந்த 2 மாதங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், மின் நுகர்வும் அதிகரித்து உள்ளது. பல்வேறு இடங்களில் மின் வெட்டும் ஏற்பட்டு உள்ளது.