செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 125 தடவை அதிதீவிர கனமழை

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 125 தடவை அதிதீவிர கனமழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 125 தடவை அதிதீவிர கனமழை
Published on

புதுடெல்லி,

204 மி.மீட்டருக்கு மேல் பெய்யும் மழை, அதிதீவிர கனமழையாக வகைப்படுத்தப்படுகிறது. கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், நாடு முழுவதும் இத்தகைய 125 அதிதீவிர கனமழை நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.

செப்டம்பர் மாதத்தில் 89 நிகழ்வுகளும், அக்டோபர் மாதத்தில் 36 நிகழ்வுகளும் நடந்துள்ளன. கடந்த ஆண்டு இதே செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 71 தடவை மட்டுமே அதிதீவிர கனமழை பெய்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், இதுதான் அதிகபட்ச அதிதீவிர கனமழை நிகழ்வுகள் ஆகும். தென்மேற்கு பருவமழை தாமதமாக விடைபெற்றது, வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானது உள்ளிட்டவை இதற்கான காரணங்கள் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com