மராட்டியத்தில் தொடரும் கனமழை: பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன

மராட்டியத்தில் தொடரும் கனமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
மராட்டியத்தில் தொடரும் கனமழை: பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் பலத்த மழை கொட்டித்தீர்த்து வருகிறது. கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பஞ்சகங்கா மற்றும் கிருஷ்ணா நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பல இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணியில் உதவுவதற்காக ராணுவ படையும் வரவழைக்கப்பட்டு உள்ளது. மேலும் கடற்படை, விமானப்படையின் உதவியையும் மாவட்ட நிர்வாகம் கேட்டுள்ளது. மீட்பு பணிகள் குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

கோலாப்பூர், சாங்கிலி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி தவித்த ஒரு கர்ப்பிணி மீட்கப்பட்டுள்ளதாகவும், 50 ஆயிரம் பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், 2 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் புனே மண்டல கமிஷனர் தீபக் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com