

கடப்பா,
வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்பட்ட கனமழையால், பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, ஆறுகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ராயலசீமா மாவட்டங்களான சித்தூர் மற்றும் கடப்பாவில், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் அடித்து செல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது.
ராஜம்பேட்டை பகுதியில் உள்ள கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த பக்தர்கள் கூட்டம் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இந்த நிலையில் நந்தலூர் அருகே 3 உடல்கள் மீட்கப்பட்டன என முதற்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், அன்னமயா அணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் சிக்கி கொண்ட கிராமவாசிகள் 20 பேரில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. காணாமல் போன 12 பேரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.