

பெங்களூரு,
வடகர்நாடகத்தில் உள்ள ராய்ச்சூர், பல்லாரி, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகி ரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வந்தது. கொளுத்தும் வெயில் காரணமாக மக்கள் வீட்டுக் குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பெங்களூரு உள்பட மாநிலத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் வடகர்நாடக மாவட்டங்களில் மழை பெய்திருந்தது.
இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை வெயில் வாட்டி வதைத்தது. மதியத்துக்கு பின்பு வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. இதற்கிடையே மாலை 4 மணிக்கு இடி மின்னலுடன் பெங்களூருவில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக பெங்களூரு நகர் முழுவதும் பலத்த சூறைக்காற்று வீசியது. அத்துடன் நகரில் ஒரு சில பகு திகளில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
அந்த ஆலங்கட்டிகளை எடுத்து பெங்களூரு நகரவாசிகள் ஆச்சரியம் அடைந்தனர். அதே நேரத்தில் சூறைக்காற்று வீசியதால் நகரில் பல பகுதிகளில் ராட்சத மரங்களும், மரக்கிளை களும் முறிந்து விழுந்தன. அவ்வாறு முறிந்து விழுந்த மரங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் மீது விழுந்து அமுக்கியது. இதனால் ஏராளமான வாகனங்கள் முற்றி லும் நொறுங்கி சேதம் அடைந்தது.
அந்த மரங்களை வெட்டி அகற்றும் பணிகளில் மாநகராட்சி தொழிலாளர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர். கோடை வெயிலில் சிக்கி தவித்த பெங்களூரு நகரவாசிகள் இரவு 7 மணி வரை 3 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் உற்சாகம் அடைந்தனர். ஆனால் இதே கோடை மழையால் பெங்களூருவில் 7 பேர் பலியான பரிதாபம் நடந்துள்ளது. பெங்களூருவில் 3 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழைக்கு அரசு ஆஸ்பத்திரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி சிறுமிகள் உள்பட 7 பேர் பலியானார்கள். பலியானவர்களில் மழைக்கு ஒதுங்கியவர்கள், வியாபாரிகள் அடங்குவர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுவர் இடிந்துவிழுந்ததில் இறந்தவர்கள் சாலையோர வியாபாரிகள் என்பதை அறிந்த முதல்-மந்திரி சித்தராமையா, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடந்தவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும், இறந்தவர்கள் 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்த முதல்வர் சித்தராமையா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்தார்.
இந்தநிலையில், பெங்களூருவில் பெய்த கனமழைக்கு பௌரிங் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பெங்களூருவில் பெய்த கனமழைக்கு பௌரிங் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த செய்தி மனதை உலுக்கியது. இந்த விபத்து மிகவும் "துரதிர்ஷ்டவசமானது" விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியை செலுத்துவதோடு, தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
மேலும், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.