மராட்டியத்தில் கனமழைக்கு ஒரே நாளில் 3 பேர் பலி


மராட்டியத்தில் கனமழைக்கு ஒரே நாளில் 3 பேர் பலி
x

தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மராத்வாடாவில் உள்ள 8 மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. பீட் மாவட்டத்தில் அதிகபட்சமாக 14 செ.மீ. மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் கனமழையால் பீட் மாவட்டத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்தனர். நாக்பூரில் ஒருவர் உயிரிழந்தார். 120-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

அவசரகால நிவாரண பணிகளில் மத்திய பேரிடர் மீட்பு படையின் 12 குழுக்கள் உள்பட பல்வேறு மீட்புக்குழுக்கள் ஈடுபட்டு உள்ளன. மராத்வாடா, விதர்பாவின் சில பகுதிகளில் பெய்த கன மழையால் நிரம்பி வழியும் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளை மாநில நிர்வாக்கத்தினர் கண்காணித்து வருகின்றனர்.

1 More update

Next Story