தெலுங்கானாவில் கனமழை: அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

தெலுங்கானாவில் கனமழையை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தெலுங்கானாவில் கனமழை: அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு தெலுங்கானா ஐகோர்ட்டில் உள்ள அனைத்து அமர்வுகளும் நாளை முதல் வருகிற 30ந்தேதி வரை காணொலி காட்சி வழியே இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, குலாப் புயலால் ஏற்படும் கனமழையை முன்னிட்டு தெலுங்கானாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்கள் நாளை ஒரு நாள் மூடப்பட்டு இருக்கும் என முதல் மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்து உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com