

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் மாநிலம் முழுவதும் மழையாலும், மின்னல் தாக்கியும் ஒரே நாளில் 17 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் அமேதி, பல்ராம்பூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர் பலத்த மழை காரணமாக இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.