உத்தரகாண்ட்: ஹெலிகாப்டர் அவசர அவசரமாக சாலையில் தரையிறக்கம்


உத்தரகாண்ட்: ஹெலிகாப்டர் அவசர அவசரமாக சாலையில் தரையிறக்கம்
x
தினத்தந்தி 7 Jun 2025 4:43 PM IST (Updated: 7 Jun 2025 4:47 PM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்ட்டில் சாலையில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

டேராடூன்,

உத்தரகண்ட் மாநிலம், குப்த்காஷியில் இன்று 5 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானி சரியான நேரத்தில் சிக்கலைக் கண்டறிந்து அருகிலுள்ள சாலையில் அவசரமாக தரையிறக்கினார்.விமானத்தில் இருந்த ஐந்து பயணிகளும் காயமின்றி தப்பினர். அதேநேரத்தில் விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டது.உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் சேதமடைந்தது. .இருப்பினும், பைலட்டின் சாதுர்யத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் நிர்வாகம், சம்பவ இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பி, ஹெலிகாப்டரை சாலையில் இருந்து அகற்றி, போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்தது.

1 More update

Next Story