

புதுடெல்லி
துபாயில் இருந்து, டெல்லி விமான நிலையத்துக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பயணி வந்தார். டெல்லி விமான நிலையத்தின் உதவி மையத்துக்குச் சென்ற அந்த நபர், அங்கிருந்த பெண்ணிடம் நான் ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட், ஐ.எஸ்.ஐ குறித்த தகவல்களை தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். ஐ.எஸ்.ஐ என்பது பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பு.
இதையடுத்து, அந்தப் பெண் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த நபர் அகமது ஷேக் ரஃபீக் முகமது என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்தார். மேலும் அந்த நபர், 'நான் ஐ.எஸ்.ஐ-ல் இருந்து விலகி, இந்தியாவில் தங்க விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார். அவரை தனி அறையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.