பார்சல் வழங்க வந்த இடத்தில் உதவி: சமையலறை தீயை அணைத்த டெலிவரி ஏஜென்டுக்கு பாராட்டு மழை!

சமையலறையில் எரிந்துகொண்டிருந்த தீயைக் கண்டு அஞ்சாமல், அங்கிருந்த ஒரு துணியை எடுத்து மிகவும் சாதுரியமாக பாத்திரத்தின் மீது போர்த்தி, தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
பார்சல் வழங்க வந்த இடத்தில் உதவி: சமையலறை தீயை அணைத்த டெலிவரி ஏஜென்டுக்கு பாராட்டு மழை!
தீ- விபத்து
Published on: 

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் பார்சல் வழங்குவதற்காக வந்த டெலிவரி ஏஜென்டு ஒருவர், வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை சமயோசிதமாக செயல்பட்டு அணைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

தீ விபத்து

பஞ்சாப் மாநிலம் மொகாலியைச் சேர்ந்த மருத்துவர் ஷிவாங்கி ஜோஷி. இவர் கடந்த சனிக்கிழமை அன்று ஆன்லைனில் ஆர்டர் செய்த பார்சலைப் பெறுவதற்காக வீட்டின் வாசலுக்கு வந்துள்ளார். அந்த சமயத்தில், அவரது சமையலறை அடுப்பில் இருந்த பாத்திரத்தில் எண்ணெய் அளவுக்கு அதிகமாக சூடாகி, திடீரென பெரும் தீப்பிழம்புகளுடன் தீப்பற்றி எரிந்தது. புகைமூட்டத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷிவாங்கி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனார்.

சமயோசித செயல்

நிலைமையைப் புரிந்துகொண்ட அந்த டெலிவரி ஏஜென்டு, சற்றும் தாமதிக்காமல் வீட்டிற்குள் ஓடினார். சமையலறையில் எரிந்துகொண்டிருந்த தீயைக் கண்டு அஞ்சாமல், அங்கிருந்த ஒரு துணியை எடுத்து மிகவும் சாதுரியமாக பாத்திரத்தின் மீது போர்த்தி, தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

வைரல் வீடியோ

டெலிவரி ஏஜென்டின் இந்த அதிரடி மற்றும் துணிச்சலான செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை டாக்டர் ஷிவாங்கி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, தனக்கு உதவிய அந்த நபருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பெரும் விபத்தைத் தடுத்த அந்த டெலிவரி ஏஜென்டின் துரித செயல்பாட்டை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com