மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 8,744 பேருக்கு தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று மேலும் 8,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 8,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,28,471 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் இன்று மேலும் 22 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52,500 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 9,068 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,77,112 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 97,637 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com