போதைப்பொருளுடன் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த டிரோன் - கைப்பற்றிய பி.எஸ்.எப் படை

டிரோனில் இருந்து 470 கிராம் போதைப்பொருளை பி.எஸ்.எப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
போதைப்பொருளுடன் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த டிரோன் - கைப்பற்றிய பி.எஸ்.எப் படை
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே அமைந்துள்ள தானோ குர்த் கிராமத்தை நோக்கி இன்று ஒரு டிரோன் பறந்து வந்துள்ளது. இதைப் பார்த்த ரோந்து பணியில் இருந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தி செயல் இழக்க செய்தனர்.

வயல்வெளியில் விழுந்த டிரோனை எல்லை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர். அது சீனாவில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல் இந்த டிரோனை அனுப்பி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த டிரோன் மூலம் அனுப்பப்பட்ட பையில் இருந்து 470 கிராம் ஹெராயின் போதைப்பொருள் பாதுகாப்புப்படையினரால் கைப்பற்றப்பட்டது. இதைப்பற்றி பஞ்சாப் எல்லை பாதுகாப்புப்படையினர் எக்ஸ் வலைதளத்தில் டிரோனின் வீடியோ மற்றும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com