மிசோரமில் ரூ.13.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

கிழக்கு மிசோராமில் ரூ.13.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

ஐஸ்வால்,

அசாம் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக அசாம் ரைபிள்ஸ் மற்றும் மிசோரம் போலீசார் நடத்திய கூட்டு நடவடிக்கையில் கிழக்கு மிசோராமின் சம்பாய் மாவட்டத்தில் ரூ.13.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக புதன்கிழமை, சோகாவ்தாரில் வசிக்கும் ஒருவரிடம் இருந்து ரூ.4.23 கோடி மதிப்புள்ள 605 கிராம் அளவிலான ஹெராயின் கைப்பற்றப்பட்டது. மேலும் நேற்று மிசோரம்-மியான்மர் எல்லையில் ரூ.9 கோடி மதிப்புள்ள 30,300 மெத்தம்பேட்டமைன் மாத்திரைகளும், கணக்கில் வராத ரூ.17.49 லட்சம் பணமும் மீட்கப்பட்டன.

அதேபோல, கரீம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவரிடமிருந்து மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் மற்றும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com