மீன்பிடி படகு மூலம் கடத்த முயன்ற ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் - 9 பேர் கைது

குஜராத்தில் ரூ. 350 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மீன்பிடி படகு மூலம் கடத்த முயன்ற ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் - 9 பேர் கைது
Published on

காந்திநகர்,

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள வெராவல் துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் துறைமுகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள மீன்பிடி படகில் சந்தேகபடும் வகையில் இருந்த 9 பேரிடம் சோதனை மேற்கொண்ட போது அவர்கள் படகில் மறைத்து வைத்திருந்த 50 கிலோ எடையுள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் மதிப்பு ரூ. 350 கோடி ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான வெற்றிகரமான நடவடிக்கைக்காக கிர் சோம்நாத் போலீசாரை குஜராத் உள்துறை இணை மந்திரி ஹர்ஷ் சங்கவி பாராட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com