

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, இரட்டை குடியுரிமை வைத்திருப்பதாகவும், அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரி கர்நாடக பா.ஜனதா தொண்டர் எஸ். விக்னேஷ் சிஷிர் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவை விசாரித்த எம்.பி./எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டு ஜனவரி 28-ந்தேதி தள்ளுபடி செய்திருந்தது; குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் தீர்ப்பளிக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை என்று அந்தச் சிறப்பு கோர்ட்டு கூறியது.
அந்த உத்தரவை எதிர்த்து அவர் அலகாபாத் ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். விசாரணையின்போது ராகுல் காந்தி தனது குடியுரிமையை 'பிரிட்டிஷ்' என்று திட்டவட்டமாக ஒப்புக்கொண்டதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
நேற்று இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, குற்றச்சாட்டுகளை மேலோட்டமாகப் பார்வையிட்டபோதே ராகுல் காந்தி மீது விசாரணைக்கு உகந்த குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பது தெரியவருவதாகவும், எனவே இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், எனவே ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பிறகு, இந்த வழக்கின் விசாரணையை ஏதேனும் ஒரு மத்திய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க மாநில அரசுக்கு இந்த அமர்வு அனுமதி அளித்தது.