

தேவனஹள்ளி,
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அப்போது மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய 2 பயணிகளிடம் சோதனை நடத்தியபோது. அவர்களது உடைமைகளுக்குள் உயர்ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதுபோல், வியட்நாமில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த பயணிகள், அவர்களது உடைமைகளில் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 பயணிகளிடம் உயர்ரக கஞ்சா இருந்தது அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த பயணிகளும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், கைதான பயணிகள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நமன் சர்மா, உஷா, தீபான்சு சர்மா, பாரத் பவுத்ரி என்று தெரிந்தது. இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
வியட்நாம், மலேசியாவில் இருந்து தனித்தனியாக உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 30 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.10 கோடி என்று சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.