விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்: பெங்களூருவில் 5 பயணிகள் கைது

உடைமைகளில் சோதனை நடத்திய போது உயர்ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விமான நிலையம்
Published on: 

தேவனஹள்ளி,

வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு விமானங்களில் கடத்திய ரூ.10 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருட்கள் கடத்தல்

பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. அங்கு வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட் கள் கடத்தி வரப்படுவது அதிகரித்து வருகிறது. இவ்வாறு கடத்தப்படும் போதைப்பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வரு கின்றனர். அதுபோல், வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவது பற்றி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பெங்க ளூருவுக்கு வந்த விமானங்களில் வந்திறங்கிய பயணிகளிடமும், அவர்க ளது உடைமைகளிலும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார் கள். அப்போது மலேசியாவில் இருந்து வந்த விமான பயணியின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உயர்ரக கஞ்சா

உடனே அவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். அவர் வைத்திருந்த உடைமைகளில் சோதனை நடத்திய போது உயர்ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பயணி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 10 கிலோ 180 கிராம் உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.3 கோடியே 56 லட்சம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோல், மலேசியாவில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்திறங்கிய பயணியிடம் இருந்து ரூ.51 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 400 கிராம் உயர்ரக கஞ்சாவும், அதுபோல், சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த ஒரு பயணியிடம் இருந்து ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பிலான 5 கிலோ 300 கிராம் உயர்ரக கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது

இதுதவிர மலேசியா நாட்டில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்த பயணியும் சுங்கத்துறை அதிகாரியிடம் சிக்கினார். அவரிடம் இருந்து ரூ.2 கோடியே 41 லட்சம் மதிப்பிலான 6 கிலோ 900 கிராம் உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தாய்லாந்தில் இருந்து உயர்ரக கஞ்சா கடத்தி வந்த ஒரு பயணியையும் சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 58 லட்சம் மதிப்பிலான உயர்ரக கஞ்சாவையும் அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.

ஒட்டு மொத்தமாக 5 பயணிகளை கைது செய்து ரூ.10 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். கைதான பயணிகள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

X