பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.33 லட்சம் உயர்ரக கஞ்சா பறிமுதல்

சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த பயணி ஒருவரை பிடித்து அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
பெங்களூரு விமான நிலையம்
Published on: 

தேவனஹள்ளி,

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி போதைப்பொருட்கள் கடத்தி வரும் சம்பவம் நடந்து வருகிறது.

சோதனை

இந்த நிலையில் நேற்று காலை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பாங்காக்கில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் இணைந்து பாங்காக்கில் இருந்து வந்த விமான பயணிகள் அனைவரையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அதிகாரிகள், சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த பயணி ஒருவரை பிடித்து அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

பறிமுதல்

இதில் அவர் வைத்திருந்த பெட்டியில் ரூ.33 லட்சம் மதிப்பிலான 1 கிலோ உயர்ரக கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் உடனே அந்த பயணியை கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, விமான நிலைய போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கஞ்சா கடத்தல் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com