உயர்தர கள்ள நோட்டுக்களை இந்தியாவில் புழக்கத்தில் விடும் பாகிஸ்தான் -தேசிய புலனாய்வு அமைப்பு

உயர்தர கள்ள நோட்டுக்களை பாகிஸ்தான் இந்தியாவில் புழக்கத்தில் விடுகிறது என தேசிய புலனாய்வுத்துறை தெரிவித்து உள்ளது.
உயர்தர கள்ள நோட்டுக்களை இந்தியாவில் புழக்கத்தில் விடும் பாகிஸ்தான் -தேசிய புலனாய்வு அமைப்பு
Published on

புதுடெல்லி

மாநில காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்களின் தலைவர்களின் தேசிய மாநாடு நேற்று டெல்லியில் நடைபெற்றது. மாநாட்டில் தேசிய புலனாய்வு அமைப்பின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலோக் மிட்டல் ஒரு விளக்கக் காட்சியை வீடியோவாக காட்டினார். அதில் உயர்தர கள்ள ரூபாய் நோட்டுகளை (எஃப்ஐசிஎன்) பாகிஸ்தான் அச்சிட்டு வருகிறது என கூறினார்.

கூட்டத்தில் என்.ஐ.ஏ மேற்கோள் காட்டிய ஆறு முக்கிய சவால்களில் உயர்தர கள்ள நோட்டை புழக்கத்தில் விடுவதும் ஒன்றாகும். ஏஜென்சியால் பட்டியலிடப்பட்ட மற்றவைகள் காலிஸ்தான் நடவடிக்கைககள் அதிகரிப்பு, சைபர் ஆதாரங்களை சேகரித்தல் மற்றும் சைபர் தடயவியல் ஆய்வகங்களின் திறன் மேம்பாடு ஆகியவை ஆகும்.

தேசிய புலனாய்வு அமைப்பு என்பது கள்ள ரூபாய் நோட்டுகள் தொடர்பான வழக்குகளுக்கான ஏஜென்சி ஆகும், இதுவரையில் இதுபோன்ற 48 வழக்குகளை விசாரித்துள்ளது, அவற்றில் 13 வழக்குகள் தண்டனைக்குரியவை ஆகும்.

"மேற்கு எல்லை மற்றும் நேபாளம்" வழியாக உயர்தர கள்ள நோட்டுகள் கொண்டுவரப்படுவதாக மிட்டல் கூறினார். குறைந்த தரம் வாய்ந்த கள்ள நோட்டுகள் வங்காள தேசத்தில் இருந்து வருவதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலோக் மிட்டல் கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 50 கோடிக்கு மேற்பட்ட கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஜூன் மாதம் மக்களவையில் அறிவித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com