அந்தமான் நிகோபாருக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு - வரும் 10 ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

அந்தமான் நிகோபாருக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை பிரதமர் நரேந்திர மோடி வரும் 10-ந் தேதி துவக்கி வைக்க உள்ளார்.
அந்தமான் நிகோபாருக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு - வரும் 10 ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
Published on

புதுடெல்லி,

சென்னை-போர்ட் பிளேர் மற்றும் 7 தீவுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 2 ஆயித்து 300 கி.மீ நீளமுள்ள கடலுக்கடியில் கேபிள் அமைக்கப்பட உள்ளது. இதனை வருகிற 10 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி காணெலி மூலம் திறந்து வைக்கிறார்.

இந்த இணைப்பு மூலமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இணையாக, வங்கக்கடலில் அமைந்துள்ள அந்தமான் & நிக்கோபார் தீவுகளுக்கு விரைவான மற்றும் நம்பகமான மொபைல் மற்றும் லேண்ட்லைன் தொலைதொடர்பு சேவைகளை வழங்க முடியும் என மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com