

லக்னோ,
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் சந்தீப் ஜெய்ஸ்வால் என்ற மருத்துவரின் நண்பருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நண்பருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது.
இந்த சிகிச்சைக்காக ரூ.2.5 லட்சம் வரை செலவு செய்தும் அந்நபர் உயிரிழந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், ஜெய்ஸ்வாலிடம் கட்டண தொகையை திருப்பி தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுத்து விட்டார்.
இதனால் அவரை தாக்க உறவினர்கள் திட்டமிட்டனர். இதன்படி, வீட்டுக்கு செல்லும் வழியில் மருத்துவரை, காரில் சென்ற கும்பல் ஒன்று வழிமறித்து, செங்கல்லால் தாக்கி, துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஜெய்ஸ்வாலின் மனைவி மர்ம நபர்கள் மீது போலீசில் புகார் அளித்து உள்ளார். இதன்பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.