மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு நூதன தண்டனையாக இம்போசிஷன் எழுத வைத்த போலீஸ்...!

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டிய பேருந்து ஓட்டுநர்களுக்கு, கேரள போலீசார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.
மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு நூதன தண்டனையாக இம்போசிஷன் எழுத வைத்த போலீஸ்...!
Published on

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் கொச்சியில், விதிமீறலில் ஈடுபடும் தனியார் பேருந்துகளால், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கொச்சி நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், போக்குவரத்து விதிகளை மீறிய 32 பேருந்துகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய, 26 பேரை கைது செய்தனர். இவர்களுக்கு அபராதம் விதித்த திருப்புணித்துறை போலீசார், 'இனி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட மாட்டேன்' என 1000 முறை இம்போசிஷன் எழுத வைத்தனர். பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் காவலர்களின் மூலம் பஸ் நிறுத்ததிற்கும், பள்ளிகளுக்கும் அழைத்து செல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com