மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஹிலாரி கிளிண்டன் இந்தியா வருகை

முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வரவிருக்கிறார். #HillaryClintonIndore
மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஹிலாரி கிளிண்டன் இந்தியா வருகை
Published on

இந்தூர்,

முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வரவிருக்கிறார். மார்ச் 11 ஆம் தேதி வரும் கிளிண்டன் இந்தியாவின் உள்ள முக்கியமான சுற்றுலாப்பகுதிகளை பார்வையிட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஹிலாரி கிளிண்டனின் வருகை குறித்து இந்தூர் டி ஐ ஜி ஹரினாராயன்சாரி மிஸ்ரா கூறுகையில், இந்தூர் நகரில் இரண்டு நாட்கள் தங்கவிருக்கும் கிளிண்டன் மார்ச் 11 முதல் 13 ஆம் தேதி வரை முக்கியமான சுற்றுலாப்பகுதிகளை பார்வையிட இருக்கிறார் எனத் தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டொனால்ட் டிரம்ப்க்கு எதிராக அமெரிக்க ஜனநாயகக்கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டு தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com