

சிம்லா,
இமாசல பிரதேச பேரிடர் மேலாண்மை கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 130 நாட்களில் 432 பேர் உயிரிழந்து உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து, சாலை விபத்து மற்றும் இயற்கை பேரிடர் ஆகியவற்றால் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.
123 சாலைகள் மூடப்பட்டு உள்ளன. விவசாயிகளுக்கு மற்றும் தோட்ட விவசாயிகளுக்கு ரூ.745 கோடி உள்பட மொத்தம் ரூ.1,108 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
கடந்த 130 நாட்களில் 12 பேரை காணவில்லை. 857 வீடுகள் மற்றும் 700 கோசாலைகள் சேதமடைந்து உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.