

சிம்லா,
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சிர்மார் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 23 பேர் அந்த பேருந்தில் பயணம் செய்தனர். மார்யோக் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வளைவு ஒன்றில் திரும்பிய அந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் சாலைக்கு அருகில் உள்ள பள்ளத்தாகில் பேருந்து உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர்.
விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.