இமாச்சலபிரதேசத்தில் மலைப்பகுதியில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி

இமாச்சலபிரதேச மாநிலம் குல்லு மாவட்ட மலைப்பாதையில் கார் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். #HimachalAccident
இமாச்சலபிரதேசத்தில் மலைப்பகுதியில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி
Published on

சிம்லா,

இமாச்சலபிரதேசத்தின் குல்லு மாவட்டத்திற்கு அருகேயுள்ள ராஹ்னி நுல்லாஹ் மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்து குறித்து குல்லு மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஷாலினி அஹ்னிஹோத்ரி கூறுகையில், 5 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் 3 குழந்தைகள் என 11 பேர் இந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர். சம்பா மாவட்டத்தின் பாங்கி பகுதியைச் சேர்ந்த இவர்கள், மணாலியிருந்து பாங்கி செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகினர் எனக் கூறினர்.

இமாச்சலப்பிரதேச கவர்னர் ஆசார்யா தேவ் விராத் மற்றும் முதல்வர் ஜெய் ராம் தாகூர் விபத்து குறித்து தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மேலும் குல்லு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முதல்வரின் உத்தரவின் பேரில், விபத்து நிகழ்ந்த பகுதிக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்களை வெளியிட்ட போலீஸார், மலைப்பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com