

சிம்லா,
இமாசல பிரதேசத்தின் வருவாய்-பேரிடர் மேலாண்மைக்கான இயக்குனர் மற்றும் சிறப்பு செயலாளரான சுதேஷ் குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, இமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 13ந்தேதியில் இருந்து இதுவரை இயற்கை பேரிடர் மற்றும் விபத்துக்கு 187 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.
இதுதவிர, 4 பேரை காணவில்லை. இந்த காலக்கட்டத்தில் 381 விலங்குகளும் உயிரிழந்துள்ளன. நேற்று வரையில் மாநிலத்தில் ரூ.401 கோடி நிதியிழப்பு ஏற்பட்டு உள்ளது. பத்சேரி மற்றும் சித்குல் பகுதி உள்பட 28 சாலைகள் மூடப்பட்டு உள்ளன என்று கூறியுள்ளார்.
இதேபோன்று, கிண்ணார் மாவட்டத்தின் சித்குல் பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், சாலைகள் சீரமைப்பு பணியை மேற்கொள்ள முடியவில்லை. இதனை தொடர்ந்து சுற்றுலாவாசிகள் 90 பேர் நடுவழியில் சிக்கி தவித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.