பிரதமர் மோடியால் இமாச்சலப் பிரதேசம் வளர்ச்சி அடைந்தது - முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர்

இமாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிப் பணிகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய பங்களிப்பிற்கு முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியால் இமாச்சலப் பிரதேசம் வளர்ச்சி அடைந்தது - முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர்
Published on

சிம்லா,

இந்தியநாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதன் நினைவாக, பிரதமர் மோடி இமாச்சல பிரதேசம் சிம்லாவில் இருந்தபடி, இந்தியா முழுவதிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு திட்டப் பயனாளிகளுடனான காணொலி மூலம் கலந்துரையாடினார்.

மேலும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான பயனாளி விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடியை அவர் வழங்கினார். காலை 10.55 மணிக்கு தொடங்கப்பட்ட பிரதமர் மோடி காணொலி கலந்துரையாடல் மதியம் 1 மணி அளவில் நிறைவு பெற்றது.

இந்த நிலையில், பிரதமர் மோடி இமாச்சலப் பிரதேசம் வருகை குறித்து அம்மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில்,

"இந்த நிகழ்ச்சிக்கு இமாச்சலப் பிரதேசத்தை தேர்ந்தெடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடியின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடியின் உதவியால்தான் நாங்கள் இங்கு வளர்ச்சிப் பணிகளைச் செய்ய முடிந்தது. வளர்ச்சிப் பணிகளில் பிரதமர் மோடி ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இமாச்சலப் பிரதேச மக்களுடன் பிரதமருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. மக்கள் அவருடன் எவ்வாறு உணர்வுபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளனர் என்பது சாட்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

கொரோனா தொற்றின் போது தடுப்பூசியின் முதல் டோஸ் மற்றும் அதன் நிர்வாகத்தை உள்ளடக்கியதில் இமாச்சலப் பிரதேசம் ஒரு சிறந்த இடத்தை பிடித்தாக பிரதமர் மோடி பெருமிதமாக பேசினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com