இமாசல பிரதேசம்: எய்ம்ஸ் மருத்துவமனை மீது நிலச்சரிவு; தொழிலாளர் உயிரிழப்பு

இமாசல பிரதேசத்தில் கட்டுமான பணியில் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை மீது நிலச்சரிவு ஏற்பட்டதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
இமாசல பிரதேசம்: எய்ம்ஸ் மருத்துவமனை மீது நிலச்சரிவு; தொழிலாளர் உயிரிழப்பு
Published on

பிலாஸ்பூர்,

இமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் கொதிபுரா பகுதியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணி நடந்து வந்துள்ளது. இதில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையின் குறிப்பிட்ட பகுதியில் திடீரென நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டு உள்ளது. இதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். மற்றொருவர் காயமடைந்து உள்ளார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார். அவர்கள் இருவரும் ஜார்க்கண்ட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என டி.எஸ்.பி. கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com