

சிம்லா,
இமாச்சலபிரதேசத்தில் உள்ள அடல் சுரங்கப்பாதையை ஜனாதிபதி திரவுபதி முர்மு பார்வையிட்டார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாட்கள் பயணமாக இமாச்சலபிரதேசம் சென்றுள்ளார். நேற்று காலை இமாச்சலபிரதேசத்தின் பிலஸ்பூரில் உள்ள எம்ய்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் திரவுபதி முர்மு பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்நிலையில், பணயத்தின் 2வது நாளான இன்று ஜனாதிபதி முர்மு மணாலியில் உள்ள இடும்பி தேவி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இதனை தொடர்ந்து ஹலல் ஸ்பிதி மாவட்டத்தில் ரோஹ்தங் பகுதியில் அமைக்கப்படுள்ள அடல் சுரங்கப்பாதையை ஜனாதிபதி முர்மு பார்வையிட்டார்.
அடல் சுரங்கப்பாதை இமாச்சலபிரதேசத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இமாச்சலபிரதேச பயணத்தை நிறைவு செய்யும் ஜனாதிபதி முர்மு நாளை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.