பங்கு வர்த்தக சந்தையில் கோலோச்சிய இமயமலை பாபா யார்...? ரகசியம் கசிந்தது

பங்கு வர்த்தக சந்தையில் கோலோச்சிய இமயமலை பாபா யார் என்ற ரகசியம் கசிந்து உள்ளது.
பங்கு வர்த்தக சந்தையில் கோலோச்சிய இமயமலை பாபா யார்...? ரகசியம் கசிந்தது
Published on

புதுடெல்லி,

முறைகேடு புகாருக்குள்ளாகியிருக்கும் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

ஆனால், சித்ரா ராமகிருஷ்ணாவால், இமயமலை பாபா என்று கூறப்படும் இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வர்த்தகச் சந்தையில், கோலோச்சி வந்த அந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்பதை மட்டும் அவர்களால் இன்னமும் கண்டுபிடிக்க இயலவில்லை.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியிட்டு உள்ள ஒரு தகவலில் இந்த நபர் பாபா இல்லை என்றும், இமயமலைக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், அவர் இந்த நாட்டின் வேறு ஏதேனும் ஒரு மூலையில் இருக்கலாம். அவர் மத்திய நிதியமைச்சகத்தின் முன்னாள் அதிகாரி என்றும், அவர் மூலதனச் சந்தையின் பொறுப்பில் இருந்தவர் என்றும், ராமகிருஷ்ணாவின் வாழ்க்கையை வடிவமைத்து தேசிய பங்குச் சந்தையில் அவர் முதலிடத்தை அடைய உதவியவர் என்றும் தெரிவிக்கிறது.

இருப்பினும், இந்த விஷயத்தில் விரிவான விசாரணைக்குப் பிறகு செபி இந்த கோட்பாட்டை நிராகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com