

அசாம் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது. அசாம் மாநில பாஜக சட்டமன்ற குழு தலைவராக ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மாநில ஆளுநரை ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று சந்தித்து தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களின் பட்டியலை வழங்கினார். இதன்படி, நேற்று ஆட்சியமைக்குமாறு ஆளுநா ஜகதீஷ் முகி, ஹிமந்த சர்மாவுக்கு அழைப்பு விடுத்தா.
இதையடுத்து, ஹிமந்த பிஸ்வ சாமா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா ஸ்ரீமந்த சங்கரதேவா கலாஷேத்ராவில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது. முதல் மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சாமாவுக்கு ஆளுநா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பதவியேற்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் கலந்து கொண்டார்.