விரைவில் இந்தியாவில் பெரிய சம்பவம் இருக்கிறது...? ஹிண்டன்பர்க் விடுத்த எச்சரிக்கை

ஹிண்டன்பர்க் ரிசர்ச் பதிவிட்டுள்ள இந்தியா குறித்த எக்ஸ் வலைதள பதிவு உலகளவில் பேசுபொருளாகி உள்ளது.
விரைவில் இந்தியாவில் பெரிய சம்பவம் இருக்கிறது...? ஹிண்டன்பர்க் விடுத்த எச்சரிக்கை
Published on

புதுடெல்லி,

உலகில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனம் ஹிண்டன்பர்க். இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் அதானி குழு நிறுவனங்கள் மீது கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதானி குழுமம் பங்கு முறைகேடு, பங்கு மதிப்பை உயர்த்திக் காட்டி, அதன் மூலம் அதிகக் கடன் பெறுதல், போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அறிக்கையில் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, ஹிண்டன்பர்க்கின் அறிக்கை வெளியான உடனேயே, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் விலை மாபெரும் சரிவை சந்தித்தன. 86 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதானி குழுமத்தின் பங்குகள் சரிவை சந்தித்தன. இதனால் அதானி குழுமத்திற்கு பல ஆயிரம் கேடி நஷ்டம் ஏற்பட்டது.

இதனிடையே தங்கள் குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க்கின் கூற்றுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் மறுப்பு தெரிவித்தது. ஆனால், தங்களது இந்த அறிக்கை தவறானது என்று கருதினால், அதானி குழுமம் தங்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று அதானி குழுமத்திற்கு ஹிண்டன்பர்க் அழைப்பும் விடுத்திருந்தது.

அதானி மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரிக்க கேரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தெடரப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம்கோர்ட்டு செபி விசாரணை நடத்தினால் போதும் என கூறியது. உண்மையில் ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை என்பது அதானி குழுமத்துக்கு பெரும் பிரச்சினையை உருவாக்கியது.

இந்நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் இன்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "விரைவில் இந்தியாவில் பெரிய சம்பவம் நடக்கபோகிறது.." என்று பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவின் ஒரு முன்னணி நிறுவனம் குறித்த மோசடிகள் மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் உலகளவில் பேசுபொருளாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com