

பெங்களூரு,
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நடிகர் சுதீப் இந்தி தேசிய மொழி அல்ல என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சரியானது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்தந்த மாநிலங்களில் உள்ள தாய்மொழிக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. அதை தான் சுதீப் கூறியுள்ளார். இதை அனைவரும் மதிக்க வேண்டும். மத வெறுப்பு விஷயங்கள் குறித்து தெலுங்கானா முதல்-மந்திரி கூறியுள்ளார்.
மதம் என்பது அவரவர்களின் மனதில் உள்ளது. அனைத்து சாதி-மதத்தை சேர்ந்த மக்கள் அமைதியாக, அன்பாக, ஒற்றுமையாக உள்ளனர். பிற நாடுகளில் மதத்தின் பெயரில் பயங்கரவாதம் நடந்துள்ளது.
யாரும்-யாருக்கும் அறிவுரை கூற வேண்டியது இல்லை. நமது நாட்டில் அமைதி, நல்லிணக்கம், அரசியல் சாசனம் உள்ளது. இதன்படி வாழ்ந்து வருகிறோம். அவரவர் பணிகளை செய்தால் போதுமானது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.