பா.ஜனதா தலைவர்களுக்கு இந்து அமைப்பினர் கண்டனம்

சிவமொக்காவில் பா.ஜனதா தலைவர்களை எதிர்த்து இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பா.ஜனதா தலைவர்களுக்கு இந்து அமைப்பினர் கண்டனம்
Published on

சிவமொக்கா;

சிவமொக்கா டவுனில் கோபி சதுக்கத்தில் நேற்று மாவட்ட இந்து அமைப்பினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா எம்.எல்.ஏ., ராகவேந்திரா எம்.பி. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், 'இந்து அமைப்பினர் படுகொலை செய்யப்படுவதை இனி இந்து அமைப்பினர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். இதற்கு நடவடிக்கை எடுக்காத பா.ஜனதா தலைவர்களை கண்டிக்கிறோம். பா.ஜனதாவை ஆட்சி கட்டிலில் அமர வைத்தது காரில் சுற்றுவதற்கு அல்ல.

இந்து தொண்டர்களின் உயிரைகாப்பற்ற முடியாத பா.ஜனதா தலைவர்கள் எதற்கு?. பா.ஜனதா தலைவர்களுக்கு இது கடைசி எச்சரிக்கை. உயிரை பணயம் வைத்து இளைஞர்கள் இந்து மதத்தை வளர்த்து வருகிறார்கள். ஆனால் தலைவர்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து அவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டர் செல்வமணியிடம் கொடுத்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com