'இந்துக்களிடம் ஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே மயானம் என்ற கொள்கை இருக்க வேண்டும்' - மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நல்லிணக்கம், ஒற்றுமை போன்ற செய்திகளை மக்களிடம் பரப்ப வேண்டும் என மோகன் பகவத் கூறினார்.
'இந்துக்களிடம் ஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே மயானம் என்ற கொள்கை இருக்க வேண்டும்' - மோகன் பகவத்
Published on

லக்னோ,

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 5 நாள் பயணமாக உத்தர பிரதேசத்தின் அலிகார் சென்றுள்ளார். அங்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மத்தியில் பேசும்போது இந்து சமூகத்தின் அடித்தளமான மதிப்பீடுகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, பாரம்பரியம், கலாசார விழுமியங்கள் மற்றும் தார்மீகக் கொள்கைகளில் வேரூன்றிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். சாதி வேறுபாடுகளை களைய வலியுறுத்திய அவர், இதற்காக 'ஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே மயானம்' என்ற கொள்கையை இந்துகள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சந்தித்து, தங்கள் வீடுகளுக்கு அழைக்குமாறு அறிவுறுத்திய பகவத், அவர்களுக்கு நல்லிணக்கம், ஒற்றுமை போன்ற செய்திகளை பரப்ப வேண்டும் எனறும் கூறினார். தேசியவாதம் மற்றும் சமூக ஒற்றுமையின் அடித்தளங்களை வலுப்படுத்த பண்டிகைகளை கூட்டாக கொண்டாடுமாறும் அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com