தொண்டர்கள் போராட்டம்: மத்திய பிரதேசத்தில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மாற்றம்

தொண்டர்கள் போராட்டம் எதிரொலியாக மத்திய பிரதேசத்தில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

போபால்,

மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்து இருந்தது.

ஆனால் சில தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் வீட்டு முன் அவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இதைத்தொடர்ந்து 4 தொகுதிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்றி விட்டு புதிதாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி சுமாலி, பிபாரியா, பாட்நகர், ஜவோரா ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வருகிற 30-ந்தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com