காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்க பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்க பயங்கரவாதியை இந்திய ராணுவம் மற்றும் போலீசார் சுட்டு கொன்றனர்.
காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்க பயங்கரவாதி சுட்டு கொலை
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அனந்த்நாக் மாவட்டத்தில் ரேஷிபோரா கிராமத்தில் இந்திய ராணுவம் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினரான ஒருவரை படையினர் என்கவுண்ட்டரில் சுட்டு கொன்றனர்.

அதற்கு முன், பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த பகுதியை சுற்றி வளைத்த வீரர்கள் குடிமக்களை வேறு இடத்திற்கு செல்லும்படி கூறினர்.

அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும்போது நடந்த தாக்குதலில், 2 வீரர்கள் மற்றும் குடிமக்களில் ஒருவர் என 3 பேர் காயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கி மற்றும் போருக்கான ஆயுதங்களை படையினர் கைப்பற்றி உள்ளனர். இந்த தகவலை ஸ்ரீநகரில் உள்ள பாதுகாப்பு படை அலுவலகம் தெரிவித்து உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com