

கிஷ்த்வார்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் போலீசார், ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், கடந்த சில நாட்களுக்கு முன் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்கத்தில் இணைந்த முசமில் உசைன் ஷா என்பவரை குல்னா வன பகுதியில் பதிமஹல்லா பால்மர் என்ற இடத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து ஒரு எறிகுண்டு மற்றும் 30 சுற்றுகள் கொண்ட தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதுபற்றி முன்பே வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டது. அதனால் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.