ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதிக்கு உள்ளூர் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
Published on

ஸ்ரீநகர்,

ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்ட ஒருவருக்கு உள்ளூர் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீனின் மாவட்டத் தளபதியாகக் கருதப்படும் பயங்கரவாதி அமீர் நபி வாகே என்ற அபு காசிம் மீது மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) விசாரணை நடத்தியது.

விசாரணையின் அடிப்படையில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com