கர்நாடகாவில் பாஜகவின் அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்த அனந்த குமார்

கர்நாடகாவில் பாஜகவின் அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்த அனந்த குமார் உடல் நலக்குறைவால் இன்று உயிர் இழந்தார்.
கர்நாடகாவில் பாஜகவின் அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்த அனந்த குமார்
Published on

பெங்களூரு,

1959-ம் ஆண்டு, ஜூலை 22-ம் தேதி பெங்களூரில் நடுத்தர பிரமாண குடும்பத்தில் அனந்த் குமார் பிறந்தார். கலை மற்றும் சட்ட படிப்பை முடித்த அனந்த குமார், சங்க்பரிவாரின் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பின் மாணவர் அமைப்பில் இருந்தார். இந்திரா காந்தி கொண்டுவந்த அவசரநிலையை எதிர்த்து போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டு அனந்த் குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 1987-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து, மாநில செயலாளர், யுவமோர்ச்சா மாநிலத் தலைவர், பொதுச் செயலாளர், தேசியச் செயலாளர் ஆகிய பொறுப்புக்களை அனந்த் குமார் வகித்தார்.

கர்நாடகாவில் பாஜகவை வளர்க்க முக்கிய காரணமாக அனந்த் குமார் இருந்தார். கர்நாடகவில் பாஜக ஆட்சியைப் பிடிக்க முக்கிய தூண்டுகோலாகவும் அனந்த் குமார் இருந்தார்.

6 முறை பெங்களூரு தெற்கு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றவர் அனந்த் குமார். பாஜகவில் 3 முறை மத்திய அமைச்சராக அனந்த் குமார் இருந்துள்ளார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். ஐக்கிய நாடுகள் சபையில் முதன்முதலில் கன்னடத்தில் பேசிய தலைவர் எனும் பெருமையும் இவருக்கு உண்டு.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com