

புதுடெல்லி,
இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டான கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து 'வீடுதோறும் மூவர்ணக்கொடி' என்ற இயக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக்கொடி ஏற்ற வேண் டும். நடப்பாண்டுக்கான 'வீடுதோறும் மூவர்ணக்கொடி இயக்கம் நேற்று தொடங்கி, 17-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:
-நமது மூவர்ணக்கொடிதான் நமது பெருமை. நாட்டுக்கு சிறப்பாக பங்காற்ற வேண்டும் என்பதற்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக் கிறது. 'வீடுதோறும் மூவர்ணக்கொடி' இயக்கத்தில் ஆர்வமாக பங்கேற்போம். வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான பங்களிப்பை அளிக்க கூட்டாக உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.