இடுக்கி மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை


இடுக்கி மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை
x
தினத்தந்தி 25 Jun 2025 9:19 PM IST (Updated: 25 Jun 2025 9:33 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சுரல்மலாவின் சாலியார் ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் சுரல்மலாவின் முண்டகை பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், மேப்பாடி, முண்டகையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பெய்லி பாலம் அருகே வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது.

இந்த நிலையில் கனமழை காரணமாக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து இடுக்கி ஆட்சியர் விக்னேஷ்வரி உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story