ஈரான் - இஸ்ரேல் போர்: நாடு முழுவதும் போராட்டங்களை கண்காணிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு மந்திரி சபை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.
ஈரான் - இஸ்ரேல் போர்:  நாடு முழுவதும் போராட்டங்களை கண்காணிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு
Published on

புதுடெல்லி,

ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் நெருக்கடி நிலை அதிகரித்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, தமிழகத்தில் உள்ளிட்ட மாநிலங்களில் ஷியா முஸ்லிம் ஜமாஅத் சார்பில் அமெரிக்க தூதரகம் முற்றுகை பேரணி போராட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில், ஈரான் போர் - இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஈரானுக்கு ஆதரவான போராட்டங்களை கண்காணிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், டிஜிபி களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

முன்னதாக இது குறித்து விவாதிக்க. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு மந்திரி சபை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

பிரதமர் மோடி மதுரை பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு டெல்லி சென்ற பின்னர் இரவு மணி அளவில் இந்த கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாதுகாப்பு. எரிசக்தி மற்றும் வளைகுடா நாடுகள், அமீரகத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com