2 முறை விவாகரத்து: காதலனுடன் குடித்தனம் நடத்திய இளம்பெண்.. குடும்ப கவுரவத்துக்காக கொன்று எரித்த கொடூரம்

குடும்ப கவுரவத்துக்காக தீர்த்துக்கட்டிய அந்த பெண்ணின் தந்தை மற்றும் அண்ணன் கைது செய்யப்பட்டனர்.
2 முறை விவாகரத்து: காதலனுடன் குடித்தனம் நடத்திய இளம்பெண்.. குடும்ப கவுரவத்துக்காக கொன்று எரித்த கொடூரம்
Published on

முசாபர்நகர்,

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள ஜத்வாட் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்வீர் சிங் (வயது 55). இவருக்கு சுமித்குமார் (24) என்ற மகனும், சரஸ்வதி மாலியன் (23) என்ற மகளும் இருந்தனர்.

சரஸ்வதிக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் விவாகரத்து பெற்றார். பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு 2-வதாக அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. அதுவும் மண முறிவில் முடிந்தது.

இதையடுத்து சரஸ்வதிக்கு, அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதற்கு ராஜ்வீர் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி சரஸ்வதி தனது காதலனுடன் குருகிராமில் தனியாக ஒரு வீட்டில் சேர்ந்து வாழத்தொடங்கினார்.

இதனால் தங்கள் குடும்ப கவுரவம் பாதிக்கப்பட்டதாக கருதிய ராஜ்வீர் சிங்கும், சுமித்குமாரும் கடும் ஆத்திரம் அடைந்தனர். சரஸ்வதியை தீர்த்துக்கட்டவும் முடிவு செய்தனர். கடந்த 3-ந்தேதி சரஸ்வதி அவரது வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த ராஜ்வீர் சிங்கும், சுமித்குமாரும் அங்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உன்னால் குடும்ப மானமே போய்விட்டது என்று கூறி சரஸ்வதியை கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர் உடலை அருகில் உள்ள கால்வாய் கரைக்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதுபற்றிய புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்வீர் சிங், சுமித் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com