ஆண்டு முடிவதற்குள் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு; விவசாய மந்திரி தோமர் திட்டவட்டம்

இந்த ஆண்டு முடிவதற்குள் விவசாயிகள் பிரச்சினை தீர்க்கப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆண்டு முடிவதற்குள் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு; விவசாய மந்திரி தோமர் திட்டவட்டம்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு சீர்திருத்தம் என்ற பெயரில் கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்க்கிறார்கள். இந்த சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு 3 வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுடன் விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர், உணவு மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக ராஜாங்க மந்திரி சோம் பிரகாஷ் ஆகியோரைக் கொண்ட மத்திய அரசு குழு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாமல், முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இந்த தருணத்தில் விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாங்கள் தொடர்ந்து விவசாயிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஒட்டுமொத்தமாக அவர்களுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே எங்கள் முயற்சி ஆகும். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். விவசாயிகள் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வை நோக்கி நகர முடியும் என்று நான் நம்புகிறேன்.

முறைசாரா பேச்சுக்கள் நடக்கின்றன இதில் ஏதேனும் வழிபிறக்கும் என்று நம்புகிறேன். மோடி அரசு 3 வேளாண் சட்டங்களை தெளிவான நோக்கத்துடன்தான் இயற்றி உள்ளது. அதன் முடிவுகள் நன்றாக இருக்கும். இந்த ஆண்டு முடிவதற்குள் விவசாயிகள் பிரச்சினை தீர்க்கப்படும். எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com